கூத்தப்பாக்கத்தில் 108 சங்காபிஷேகம்!
ADDED :3928 days ago
கடலூர்: கடலூர் அடுத்த கூத்தப்பாக்கம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது. கடலூர் அடுத்த கூத்தப்பாக்கம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் நேற்று 108 சங்கு அபிஷேகம் நடந்தது.அதனையொட்டி காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகத்தை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாகம் நடைபெற்றது. பகல் 1:35 மணிக்கு மூலவருக்கு வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.