உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபிரம்ம அய்யங்கார் கோவில் கும்பாபிஷேகம்!

வீரபிரம்ம அய்யங்கார் கோவில் கும்பாபிஷேகம்!

ஆர்.கே.பேட்டை: வீரபிரம்ம அய்யங்கார் கோவில் மற்றும் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று  நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த,  நாககுப்பம் கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில், நேற்று, காலை 7:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான யாகசாலை பூஜை  கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. நேற்று, காலை 7:30 மணிக்கு, யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு  செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை அடுத்த, கொத்தகுப்பம் வீரபிரம்ம அய்யங்கார் கோவிலில்,  காலை 11:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் கோபுரம், மூலவர் மற்றும் சிவனுக்கு ஏக கால கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில்,  கொத்தகுப்பம், பாத்தகுப்பம், அத்திமாஞ்சேரிபேட்டை, ராமாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !