மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
3850 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
3850 days ago
கோயம்பேடு: கோயம்பேட்டில், பழமையான லவபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயம்பேடு, வடக்கு மாட வீதியில், சேமாத்தம்மன் கோவில் அருகில், லவபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மேட்டு கோவில்என்று அழைக்கப்படும் அந்த கோவிலில், சிவன் சன்னிதிக்கு எதிரே, வனதுர்க்கை சன்னிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பகுதிவாசிகள், கோவிலை புதுப்பிக்க முடிவு செய்து, 2011ம் ஆண்டு, இந்து சமய அறநிலைய துறையிடம் அனுமதி பெற்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால், பணிகள் தொடர முடியாமல் போயின. இந்த நிலையில், மீண்டும் கடந்த ஆண்டு, நவ., முதல், திருப்பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. அந்த கோவிலில், ஏற்கனவே சிவன் மற்றும் வனதுர்க்கை சன்னிதிகள் மட்டுமே இருந்தன. தற்போது, அம்பாள், பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகிய சன்னிதிகளும் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.
3850 days ago
3850 days ago