வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிபெருவிழா கொடியேற்றம்!
ADDED :3877 days ago
திருக்கோவிலுõர்: திருக்கோவிலுõர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கோவிலுõர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் மாசிமகப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை. கலச ஸ்தாபனம், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், ரிஷபக்கொடி பூஜை, 7.15 மணிக்கு கொடியேற்றி மகா தீபாராதனை நடந்தது. சோமாஸ்கந்தருக்கு தீபாராதனை, நவசக்திகள் ஆவாகனம் செய்து பலி பூஜை நடந்தது. சுவாமி ஆலயம் வலம் வந்தார். பஞ்சமூர்த்திகள் அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா நடந்தது.