செங்கோட்டையன் நகரில் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3877 days ago
கோபி : கோபி, செங்கோட்டையன் நகர் மேற்கு வீதியில் செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம், நாளை (25ம் தேதி) நடக்கிறது.முன்னதாக, இன்று (24ம் தேதி) இரவு, 9.30 மணிக்கு செல்வ கணபதிக்கு வாஸ்து சாந்தியும், அஷ்டபந்தனம், ஸயணாதி வாசம் நடக்கிறது. 25ம் தேதி அதிகாலை, 4.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, அதிகாலை, 5.30 முதல் மணிக்கு கலச தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் நடக்கிறது.