அங்காள பரமேஸ்வரி கோவிலில் தேர் விழா!
ADDED :3876 days ago
விழுப்புரம்: வளவனூரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் இரண்டாம் ஆண்டுதேர் திருவிழா நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மதியம் 3:00 மணிக்கு தேர் திருவிழாவையொட்டி மக்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (24ம் தேதி) இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம் கோவில் உட்பிரகாரம் அவஜா ரோகணம், வரும் 2ம் தேதி இரவு 8:00 மணிக்கு மகா கும்ப பள்ளயம் நடக்கிறது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா கலிவரதன் மற்றும் அறங்காவலர்கள் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.