உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தப்பன் திருவப்பன திருவிழா கோலாகலம்

முத்தப்பன் திருவப்பன திருவிழா கோலாகலம்

குன்னூர் : அருவங்காடு பகுதியில் முத்தப்பன் திருவப்பன திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.அருவங்காடு முத்தப்பன் பக்தஜன சமதியின், ஏழாம் ஆண்டு முத்தப்பன் திருவிழா, அருவங்காடு செட்டியார் காலனியில் விமரிசையாக நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில், கணபதி ஹோமம் நடந்தது. விழாவை எம்.ஆர்.சி., கமாண்டென்ட் சுரேஷ்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.தொடர்ந்து முத்தப்பன் மலையிறக்கல், முத்தப்பன் வெள்ளாட்டம், பள்ளிவேட்டை, தாளப்பொலி, கலிக்கப்பாட்டு, கலசம் எழுந்தள்ளல் ஆகியவை நடந்தன.இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், முத்தப்பன் திருவப்பன திருமுடி சார்த்தல், பள்ளி வேட்டை தீபாராதனை ஆகியவை நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !