உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி கோவிலில் கொடியேற்று விழா!

திரவுபதி கோவிலில் கொடியேற்று விழா!

விழுப்புரம்: தீ மிதி திருவிழாவை முன்னிட்டு கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்று விழா நடந்தது. விழுப்புரம் கீழ்பெரு ம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் வரும் ஏப்., 10ம் தேதி 465ம் ஆண்டு தீ மிதி திருவிழா நடக்கிறது.நேற்று காலை 6:00  மணிக்கு கொடியேற்று விழா நடந்தது. காலை  8:00 மணிக்கு கரகம் ஜோடித்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பின் 9:00  மணிக்கு தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை நாட்டாண்மை ஜெயபால் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !