நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED :3876 days ago
காரைக்கால்: காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும், அனுமந்த வாகனம் சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 1ம்தேதி மாலை திருக்கல்யாணம், 2ம் தேதி காலை வெண்ணெய்த்தாழி சேவை, 3ம் தேதி காலை திருத்தேர் உற்சவம், சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி, 4ம் தேதி காலை உற்சவர் திருமஞ்சனம், இரவு பெரிய பெருமாள் திருமஞ்சனம் நடக்கிறது.