கவலைகள் தீர!
ADDED :3980 days ago
ஸஹஸ்ராண்டபோக்தா த்வயா சூரநாமா
ஹதஸ்தாரகஸ் ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய:
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மனக்லேஸமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாமி
கவலைகள் தான் மனிதனை வீழ்த்தும் கொடிய நோய். இதை நீ விலக்கியருள்வாய் என்பதுதான் இந்த ஸ்லோகத்தில் செய்யப்படும் பிரார்த்தனை. சூரபத்மன், தாரகன், சிங்கமுகன்... இப்படி எத்தனையெத்தனையோ அசுரர்களை நீ வீழ்த்தி விட்டாய். ஆனால், என்னை வருத்துகின்ற கவலை என்கிற அசுரனை ஏன் கொல்லாமல் விட்டாய்? நான் என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? என்று மனம் ஒன்றும் பிரார்த்தனை இது. தினமும் 12 முறை வீதம் சொல்லி வந்தால் எல்லாக் கவலைகளுக்கும் தீர்வு உண்டாகும்.