கோவை கோனியம்மன் கோவிலில் அக்னிச்சாட்டு!
https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_40263_103847587.jpgகோவை கோனியம்மன் கோவிலில் அக்னிச்சாட்டு!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_40263_103853737.jpgகோவை கோனியம்மன் கோவிலில் அக்னிச்சாட்டு!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_40263_103858566.jpgகோவை கோனியம்மன் கோவிலில் அக்னிச்சாட்டு!கோவை : கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் நேற்று கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டு நடந்தது. கோவை, கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 17 ம் தேதி, பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது.திருவிழாவில் நேற்று இரவு, 7:00 மணிக்கு கொடியேற்றம், அக்னிச்சாட்டு நடந்தது. பேரூர் ஆதினம், இளையபட்டம் மருதாசல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்டோர் அருளுரை வழங்கினர்.தொடர்ந்து, ’மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவது - அருளே! பொருளே!’ எனும், தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.’அருளே’ எனும் தலைப்பில், கோனியம்மன் கோவில் அறங்காவலர் மணியும், புலவர் பொன்கொடியும், ’பொருளே’ எனும் தலைப்பில், பேராசிரியர் சிவசெந்தில் மற்றும் கவிஞர் தனமணி வேங்கடபதியும் பேசினர். சிரவை ஆதினப்புலர் செந்தமிழ் செகநாதன் நடுவராக பங்கேற்றார்.