உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி ரோப்கார் இயங்கியது: பராமரிப்பு பணி தள்ளிவைப்பு!

பழநி ரோப்கார் இயங்கியது: பராமரிப்பு பணி தள்ளிவைப்பு!

பழநி: பழநி ரோப்கார் பராமரிப்பு பணிக்காக நிறுத்தம் என அறிவிக்கப்பட்டது. போதிய பணியாளர்கள் வராத காரணத்தால் வழக்கம் போல் இயங்கியது.  பழநிமலைக்கோயிலுக்கு பக்தர்கள் மூன்று நிமிடத்தில் எளிதாக சென்று வரும் வகையில் நாள்தோறும் ரோப்கார் இயக்கப் படுகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை விரும்பி பயணம் செய்கின்றனர். மாதந்திர பராமரிப்பு பணிக்காக நேற்று ஒருநாள் ரோப்கார் நிறுத்தபட உள்ளதாக என பழநிகோயில் நிர்வாகம் முன்கூட்டியை அறிவிப்பு செய்தது.  இந்நிலையில் பொறியாளர், பணியாளர் சிலர் திடீர் விடுப்பு காரணமாக நடக்கவிருந்த பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ரோப்கார் இயங்கவில்லை என நினைத்து வின்ச், யானை, படிப்பாதை வழியாக மலைகோயிலுக்கு சென்ற பக்தர்கள், அங்கு ரோப்கார் இயக்கப்படுவது கேள்விபட்டு ஏமாற்றம் அடைந்தனர். சஷ்டி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளிற்கு ஆளும்கட்சியினர் மலைக்கு சென்று அர்ச்சனை செய்வதற்கு வசதியாக ரோப்கார் பராமரிப்பு பணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என பக்தர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிப்.,24ல் ரோப்கார் நிறுத்தம் என அறிவித்தோம். அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் எனதெரியும், அப்படி இருக்கையில் ஆளுங்கட்சியினர் வசதிக்காக பராமரிப்புபணி நிறுத்தபட்டு, ரோப்கார் இயங்குகிறது எனக்கூறுவதில் உண்மை இல்லை. பணியாளர்கள் விடுப்பு காரணமாக பராமரிப்புபணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது , என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !