திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம்: கொடியேற்றத்துடன் துவங்கியது!
ADDED :3927 days ago
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில், மாசித் தெப்ப உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை பெருமாள், தேவியர் சகிதம் கருங்கல் மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து, சக்கரத்தாழ்வார்,கொடிபடத்துடன் திருவீதி உலா நடந்தது. அஷ்டதிக்கு பாலகர்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. கோயிலினுள் பிரதான பலிபீட பூஜை, கொடி படத்திற்கு அபிஷேக,ஆராதனை நடந்தது. பகல் 11.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பெருமாள் உபயநாச்சிமாருடன் கல்யாண மண்டபம் எழுந்தருளினார்.இரவு சிம்ம வாகனத்தில் பெருமாள் திருவீதி வலம் வந்தார். மார்ச் 4ல் காலை முட்டுதள்ளுதல்,மார்ச் 5ல் பகல்,இரவு இருமுறை தெப்பம் திருக்குளத்தை வலம் வருதலும்,மார்ச் 6ல் காலையில் தீர்த்தவாரியும் நடைபெறும்.