உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலையில் திருக்கல்யாண உற்சவம்!

ஆனைமலையில் திருக்கல்யாண உற்சவம்!

ஆனைமலை: ஆனைமலையில் உள்ள புகழ்பெற்ற திரவு  பதியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஆனைமலையில், 400 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவி லில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்தாண்டு குண்டம் திருவிழா கடந்த 18 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி யது. இதையடுத்து அம்மனுக்கு தினந்தோறும் அபிேஷக பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம்  நடந்தது.  இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் பங்கேற்று வேண்டிக்கொண்டனர்.  இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு  அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !