உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணத்தில் இளைய மகாமகம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

கும்பகோணத்தில் இளைய மகாமகம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

கும்பகோணம் : கும்பகோணம்த்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதம் மகத்தன்று நீராடுவது மகாமக நீராடல் நடைபெறும். வரும் 2016 ம் ஆண்டு மகாமக திருவிழா நடைபெறவுள்ளது. இந்த மகாமகத்திற்கு முன்பு, இளைய மகாமக திருவிழாவின் தீர்த்தவாரி நிகழ்ச்சி, வரும் மார்ச் 4ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. இளைய மகாமகத்திற்காக சிவாலயங்களில், நேற்று முன்தினம், கொடியேற்றப்பட்டது. விசாலாட்சி அம்பாள் சமேத காசிவிஸ்வநாதர் கோயிலில், நேற்று காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரன் கோயிலில், நேற்று முன்தினம் மதியம் கொடியேற்றப்பட்டது. இதே போல், அமிர்தவல்லி தாயார் சமேத அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர் ஆகிய கோயிலிலும் விழா கொடியேற்றப்பட்டது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.வருகிற மார்ச் 7 ம் தேதி வரை நடைபெற உள்ள விழாவில், சேஷ, கமல, பூத,கிளி, யானை, மூஷிகம், மயில், ரிஷபம், ஓலைச்சப்பரம், கைலாச, குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறவுள்ளது.மார்ச் 3 ம் தேதி தேரோட்டமும், மார்ச் 4 ம் தேதி பகல் 12 மணிக்கு மேல் வெள்ளி ரிஷப வாகனத்தில் சிவாலயங்களில் இருந்து உற்சவ சுவாமிகள் அம்பாளுடன் புறப்பட்டு, மகாமகதிருக்குளத்தில் எழுந்தருளியவுடன் மாசி மக தீர்த்தவாரி (இளைய மகாமகம்) நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !