அங்காளம்மன் கோவில் தேரோட்டம்
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த துலங்கம்பட்டு அங்காளம்மன் கோவிலில் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் மகோற்சவ விழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா, கடந்த 23ம் தேதி மயானக்கொள்ளை நிகழ்ச்சி, சக்தி கரக ஊர்வலம் நடந்தது. நேற்று மதியம் 1:10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மனை தேரில் வைத்து தேரோட்டம் நடந்தது. செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் ராமர், தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தார். இன்று(25ம் தேதி ) மஞ்சள் நீராட்டுடன் மகோற்சவ விழா நிறைவடைகிறது.தேரோட்டத்தில் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் குமார், ஊராட்சி தலைவர் சந்திராபாலு, ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தம்மாள் சக்ரவர்த்தி, துணைத்தலைவர் செல்விமுருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.