பூண்டி தேர்த்திருவிழா நாளை கொடியேற்றம்
அவிநாசி : திருமுருகன்பூண்டி கோவில் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது; வரும் 4ல் தேரோட்டம் நடக்கிறது. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது; இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும் 27ல் சூரிய, சந்திர மண்டல காட்சிகள், 28ல் பூத வாகனம், சிம்ம வாகன காட்சிகள், மார்ச் 1ல், புஷ்ப விமான காட்சி நடைபெறுகிறது.வரும் 2ல், ரிஷப வாகனத்தில் திருமுருகநாத சுவாமி, காமதேனு வாகனத்தில் அம்பிகை, மயில் வாகனத்தில் சண்முகநாதர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு நடக்கிறது. 3ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.வரும் 4 அதிகாலை விநாயக பெருமான், திருமுருகநாதர், சண் முகநாதர், தேர்களுக்கு எழுந்தருளி, அருள்பாலிக்கின்றனர். மாலை 3:00க்கு தேரோட்டம் நடைபெறும். 6ம் தேதி மாலை 6:30க்கு பரிவேட்டை, இரவு 7:00க்கு மகாமக குளத்தில் தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 7ல், ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் பெருமான் வேடுபறி வைபவம், 8ல் நடராஜ பெருமானின் ஆடல் வல்லானின் பிரம்ம தாண்டவ தரிசன காட்சி, 9 காலை, மஞ்சள் நீர் விழா, இரவு மயில் வாகன காட்சியுடன் விழா நிறைவடைகிறது. தினமும் இரவு 7:00க்கு பக்தி சொற்பொழிவு, பரத நாட்டியம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.