குழப்பம் நீங்க!
ADDED :3874 days ago
அபீதிரிஹ யஜ்ஜுஷாம்
யதவதீரிதாநாம் பயம்
பயாபய விதாயிநோ ஜகதி
யந்நிதேஸே ஸ்த்திதா:
ததேத ததிலங்கித த்ருஹிண
ஸம்பு ஸக்ராதிகம்
ரமாஸக மதீமஹே கிமபி
ரங்கதுர்யம் மஹ:
-அபீதி ஸ்தவம்
எதை சரணடைவதால் பயமின்மை ஏற்படுமோ, எதை தவிர்த்தால் பயம் ஏற்படுமோ, பயத்தை ஏற்படுத்துகிற அல்லது போக்குகிறவர்கள் எதன் கட்டளைக்கு அடிபணிந்தவர்களோ, எது இந்திரன், பிரம்மா, சிவன் உள்ளிட்டவற்றைவிட மேலானதோ, எது ஸ்ரீரங்க நாச்சியாரின் நாயகனாக உள்ளதோ - அதை, ஜோதிவடிவான ரங்கநாதனை துதிக்கிறோம். தினமும் 12 முறை இந்த துதியை சொல்லி வருவதன் மூலம் மனத்தில் குழப்பம் நீங்கி பயமற்ற நிலையும். செயல்களில் நேர்த்தியும், சிந்தனையில் தெளிவும் ஏற்படும்.