உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மின்னொளி ரத புறப்பாடு!

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மின்னொளி ரத புறப்பாடு!

திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மின்னொளி ரத புறப்பாடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை திருமஞ்சன பாலாபிஷேகம் முடிந்து அம்மன் கரகத்துடன் எழுந்தருளினார்.

பின் மெயின்ரோடு, கிழக்கு ரத வீதி வழியாக வீதி உலா வந்து பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படியில் இறங்கி பூசை நைவேத்தியம் பெற்றார். இரவு 7 மணி அலங்கார மின்னொளி ரதத்தில் வீதி உலா சென்றார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிப்., 27 பகல் 2:30 மணிக்கு பூக்குழி, இரவு 8 மணிக்கு தேரோட்ட விழா, பிப்., 28 இரவு 10 மணிக்கு தசாவதாரம், மார்ச் 1 காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல், மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச்., 2 இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், மார்ச்., 3 மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !