உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவசக்தி விநாயகர் கோவிலில் மத நல்லிணக்க ஆண்டு விழா!

நவசக்தி விநாயகர் கோவிலில் மத நல்லிணக்க ஆண்டு விழா!

திருப்பூர்: திருப்பூர் புஷ்பா தியேட்டர் ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்கள் குழு சார்பில், ஸ்ரீநவசக்தி விநாயகர் கோவிலில் 20ம் ஆண்டு துவக்க விழா ÷ நற்று நடந்தது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, புஷ்பா தியேட்டர் பகுதி ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்கள்  இணைந்து, 20 ஆண்டுகளுக்கு முன், மும்மத வழிபாடு சின்னங்களுடன் விநாயகர் கோவில் கட்டினர். ஒவ்வாரு ஆண்டும் விழா நடத்தப்படுகிறது;  20ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. காலை 7:35 முதல் 9:35 மணி வரை, மகா கணபதி ஹோமம், தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடந்தது.  இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !