சுப்ரமணிய சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தில் தேர் திருவிழா
ADDED :3907 days ago
ஆர்.கே.பேட்டை: சுப்ரமணிய சுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவத்தில் நாளை தேர் திருவிழா நடக்கிறது. அம்மையார்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கடந்த 22ம் தேதி கணபதி பூஜையுடன், மாசி மாத பிரம்மோற்சவம் துவங்கி நடந்து வருகிறது. இதில், தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வருகிறார். இரவு கோவில் வளாகத்தில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தப்படுகிறது. நாளை முக்கிய உற்சவமான, தேர் திருவிழா நடைபெற உள்ளது. காலை 8:00 மணிக்கு தேர் புறப்பாடு நடக்கிறது. நண்பகல் 12:00 மணிக்கு, புளியந்தோப்பில், ஆயிரம் பக்தர்களுக்கு பொது விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5:00 மணியளவில், தேர் நிலைக்கு வந்தடைகிறது. அதை தொடர்ந்து, சிறப்பு பட்டிமன்றம் நடைபெறும்.