உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மையார்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா!

அம்மையார்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா!

ஆர்.கே.பேட்டை: அம்மையார்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று, தேர் திருவிழா நடந்தது. உற்சவர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மையார்குப்பம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவம், கடந்த மாதம், 22ம் தேதி துவங்கி  நடந்து வருகிறது. நேற்று, தேர் திருவிழா நடந்தது. பகல் 12:00 மணியளவில் தேர் புறப்பாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள், வடம் பிடித்து தேர்  இழுத்தனர்.பகல் 2:00 மணியளவில், அறநெறி தமிழ் சங்க வீதியில் தேர் நிலை கொண்டது. பின் மாலை 4:00 மணிக்கு பஜார் வீதி வழியாக வந்து,  மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது. இன்று இரவு, குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். நாளை இரவு, வள்ளி, தெய்வானை திருக்கல்ய õணமும், மலர் விமானத்தில் வீதியுலாவும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !