புதுச்சேரி ஆன்மிக பயணம்!
ADDED :3974 days ago
புதுச்சேரி: புதுச்சேரி மூத்தகுடிமக்கள் நலவாழ்வு சங்க நிர்வாகிகள், ஒரு நாள் ஆன்மிக பயணம் மேற்கொண்டனர். சங்கத்துணைத் தலைவர் உதயபாஸ்கரன் தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர்கள் முருகேச கந்தசாமி, ராஜரத்தினம், பரிதி வெங்கடேசன் உள்ளிட்ட 26 பேர் குடும்பத்துடன், ஆன்மிக பயணம் மேற்கொண்டனர். சிவ தலங்களான திருக்கடையூர், திருநள்ளார், திருமருகல், திருப்புகலுார், வைஷ்ணவ ஸ்தலங்கள் அனந்தமங்கலம், திருக்கண்ணபுரம், கோரக்கர் சித்தர் சமாதி, வடக்கு பொய்கை நல்லுார் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.