மகாமக குளத்தில் கும்பாபிஷேகம்!
ADDED :3974 days ago
அவிநாசி : திருமுருகன்பூண்டி திரு முருகநாத சுவாமி கோவிலின் மகாமக குளம், மிகவும் மோசமான நிலையில் இருந்தது. குளம் சீரமைக்கப்பட்டு, அதன் மையத்தில் புதிதாக நீராழி மண்டபம் மற்றும் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.அதன் கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் நேற்று துவங்கியது. நீராழி மண்டப கோபுரத்துக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்வித்தனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திருப்பூர் சைவ சித்தாந்த சபை அறக்கட்டளை தலைவர் ஆறு முகம், துணை தலைவர் உமாசங்கர், சாந்தி, திருமுருகநாத சுவாமி மடாலய ஆதீனம் சுந்தர்ராஜ அடிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.