புத்துமாரியம்மன் கோவில் கொடிமர பிரதிஷ்டை விழா
ADDED :3973 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் புத்துமாரியம்மன் கோவிலில் கொடிமர பிரதிஷ்டை விழா நடந்தது. காலை 9.00 மணிக்கு குருவந்தனம், அனுக்ஞை, விக்னேஷ்வரபூஜை, மகா கணபதி ஹோமம், மகா சக்தி மாரியம்மன் ஹோமம், மூல மந்திர ஹோமங்கள் நடந்தது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் ஊற்றி புரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பா பிஷேகத்திற்கான பூஜைகளை காசி குருக்கள் செய்திருந்தார்.