பூட்டி கிடக்கும் சிவன் கோவில்: பக்தர்கள் கவலை!
உத்திரமேரூர்: வாடாதவூரில், கடந்த நான்கு ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவிலை திறந்து, அன்றாட வழிபாட்டுக்கு கொண்டு வர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது வாடாதவூர் கிராமம். இக்கிராமத்தில், பழமை வாய்ந்த கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் உள்ளது.மீண்டு வரும்
இங்கு சிறப்பம்சமாக, தாமரை வடிவத்திலான பீடத்தின் மீது லிங்கம் அமைந்துள்ள து. கோவில் வளாகத்தின் மேற்கு திசையில் விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், வடக்கில் துர்க்கை மற்றும் பிரம்மா, தெற்கில் மகாவிஷ்ணு மற்றும் தட்சணாமூர்த்தி, வட கிழக்கில் நவக்கிரகங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இங்கு வீற்றிருக்கும் இறைவனை வழிபட்டால், இழந்த பொருள் மற்றும் பதவிகள் மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.
கடந்த 2010ம் ஆண்டு வரை சிறப்பாக பூஜைகள் நடந்து வந்த இக்கோவில், நிர்வாக சீர்கேடு காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. இதனால், வாடாதவூர் மற்றும் அப்பகுதியை சுற்றி உள்ள பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதிவாசி கள் கூறுகையில், கோவில் வழிபாடு இல்லாததால், பரா மரிப்பின்றி சீரழிந்து, தற்போது கோவிலை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து புதராக காட்சி அளிக்கிறது. சிவராத்திரி மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் கோவில் பூட்டி கிடப்பது, மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனவே, பூட்டி கிடக்கும் இக்கோவிலுக்கு அர்ச்சகரை நியமித்து, மீண்டும் திறந்து வழிபாட்டிற்கு விட, அறநிலைய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வருவாய் இல்லைஉத்திரமேரூர் ஒன்றிய அறநிலைய துறை ஆய்வாளர் கோவிந்தராஜ் கூறுகையில், கோவிலில் அவ்வப்போது பூஜைகள் நடத்திட, அப்பகுதி யில் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இக்கோவிலுக்கு சொந்தமான, ஆறு ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம், மழை இல்லாததால் பயிரிடப்படாமல் உள்ளது. இதனால், கோவிலுக்கான வருமானம் தடைபட்டு உள்ளது. விரைவில், இக்கோவிலுக்கென அர்ச்சகரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.