வேதாரண்யம் பிரதோஷ விழா!
ADDED :3990 days ago
வேதாரண்யம் : வேதாரண்யம், வேதாரண்யேஸ்ரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, ஸ்வாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதுபோல, வேதாரண்யம் நாகைரஸ்தா, காசி விஸ்வநாதர் கோவில், தோப்புத்துறை கைலாசநாதர் ஸ்வாமிக்கோவில், தேத்தாக்குடி அழகியநாதர் ஸ்வாமி கோவில், கோடியக்காடு குழகர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், புஷ்பவனம் சுகந்தவனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வுடையார் கோவில், கரியாபட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை ருத்ரசோமநாதர் கோவில் ஆகிய, சிவாலயங்களில், பிரதோஷ விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.