உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் அய்யந்தோப்பில் மாசிமக தீர்த்தவாரி!

திண்டிவனம் அய்யந்தோப்பில் மாசிமக தீர்த்தவாரி!

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த அய்யந்தோப்பில் மாசிமகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி விழா நேற்று  நடந்தது. திண்டிவனம் மரகதாம்பிகை சமேத  திந்திரிணீஸ்வரர்,  லக்ஷ்மி நரசிம்மர் கோவில் உற்சவமூர்த்திகள், முருங்கப்பாக்கம்  கற்பக விநாயகர்,  அய்யந்தோப்பு யோகேஸ்வரி சமேத  பதஞ்சலீஸ்வரர் கோவிலில் இருந்து கற்பக விநாயகர், நடராஜப் பெருமான் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வந்தனர். திந்திரிணீஸ்வரர் கோவில்  அஸ்ததேவருக்கும், லக்ஷ்மி நரசிம்மர் கோவில் செல்வருக்கும் மகா அபிஷேகம் நடந்தது. அஸ்ததேவர், செல்வர் மண்டபத்திலிருந்து குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.  பூஜைகளை  பாலாஜி, முகேஷ் குருக்கள், ரகு, ஸ்ரீதர் செய்தனர். மாலை 5 மணிக்கு திந் திரிணீஸ்வரர், லக்ஷ்மி நரசிம்மர்  சிறப்பு அலங்காரத்தில் அய்யந்தோப்பு முழுவதும் வலம் வந்து அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !