கைலாச நாதர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!
ADDED :4234 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாச நாதர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி பெரியநாயகி உடனுறை கைலாச நாதர் கோவில் திருப்பணிகள் நடக்க உள்ளது. நேற்று பவுர்ணமியை முன்னிட்டு கைலாச நாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது . தொரவிமற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர் . பூஜைகளை சிவநேய செல்வர் சரவணன், ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சங்கர் செய்திருந்தனர்.