உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பந்தலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பந்தலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பந்தலூர்: பந்தலூர் அருகே உப்பட்டி மேஸ்திரிகுன்னு, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பந்தலூர் அருகே உப்பட்டி மேஸ்திரிகுன்னு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய, நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் விழா கடந்த 6-ம் தேதி மாலை 4-மணிக்கு சேலக்குன்னா ஆற்றங்கரையில் இருந்து, தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து இரவு கணபதி பூஜை, ஆனோக்கியன், பஞ்சகவ்ய பூஜை, புண்ணியாகவாசம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு பாவினா அபிஷேகம், யந்திர சமர்ப்பணம், அஷ்டபந்தன மருந்து சார்த்துதல் மற்றும் கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை இரண்டாம் கால யாகவேள்விகளான விநாயகர் பூஜை, பஞ்சகவ்ய பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, புனித தீர்த்தம் ஊற்றப்பட்டது. தொடர்ந்து செல்வ கணபதி, பாலமுருகன் ஆகிய தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதுடன், அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில்,சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக பூஜைகளை தியாகராஜ குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !