ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் விருப்பன் திருநாள்: நம்பெருமாள் புறப்பாடு
ADDED :43 minutes ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் விருப்பன் திருநாள் (சித்திரை தேர்த்திருவிழா) நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரை மாதத்தில் 11 நாட்கள் வெகு விமரிசையாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் விதவிதமான வாகனங்களில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். திருவிழாவின் முதல் திருநாள் மாலை திருச்சுவிகையில் உபய நாச்சியார்களுடன் நம்பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.