அருப்புக்கோட்டை வண்டி மலர்ச்சி அம்மன் கோயில் பொங்கல் விழா
ADDED :1 hours ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பொட்டில்பட்டி, திரு நகரம் பகுதியில் உள்ள வண்டி மலர்ச்சி அம்மன், காமாட்சியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது.
அம்மனுக்கு சீர்வரிசை செலுத்துதல், குத்து விளக்கு பூஜை, கும்மி பாட்டு மற்றும் கொடை விழா நடந்தது. நேற்று காலை 200க்கும் மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து பால் குடம் எடுத்து அம்மனுக்கு நேற்று கடன் செலுத்தினர். இரவு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மாலை தீர்த்தவாரி குளத்தில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை செங்குந்தர் உறவின் முறை தலைவர் மாடசாமி தலைமையில் நிர்வாகிகள் செய்தனர்.