உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தாவு கோயில் கும்பாபிஷேகம்

சாத்தாவு கோயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் : திண்டுக்கல் பாலம் ராஜக்காபட்டி சாத்தாவு சுவாமி, வலம்புரி மங்கள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. மார்ச் 2 ல் முதல்கால யாகபூஜை நடந்தது. நேற்றுமுன்தினம் 2 ம் கால, 3 ம் கால யாகபூஜைகள், மருந்து சாற்றுதல், சுவாமிகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தன. இன்று காலை 6 மணிக்கு 4 ம் கால யாகபூஜை, காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் பூசாரி எஸ்.கே.எஸ்.அங்குச்சாமி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !