திருமலையில் நான்காம் நாள் தெப்பத்திருவிழா!
ADDED :3927 days ago
திருமலை: திருமலையில் நடந்துவரும் வருடாந்திர தெப்பத்திருவிழாவின் நான்காம் நாளான நேற்று மலையப்பசுவாமி தேவியர் சமேதரராய் புஷ்கரணி எனப்படும் தெப்பத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த மூன்று நாட்களைவிட நான்காம் நாளன்று கூட்டம் அதிகமாக இருந்தது நிறைவு நாளான இன்று இன்னும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் முழுநிலவு ஔியில் தெப்பத்தை காண்பது என்பது அழகான அபூர்வமான விஷயம், இதற்காகவே திருமலைக்கு பல பக்தர்கள் சென்றுள்ளனர்.