வில்லிவலம் முச்சந்தியம்மன் மாசி மக பார்வேட்டை உற்சவம்!
வாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த, வில்லிவலம் கிராமத்தில், திருமாங்கல்யம் பலம் காக்கும் முச்சந்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, மாசி மக பார்வேட்டை உற்சவத்தை முன்னிட்டு, இன்று பிற்பகல் 1:00 மணிக்கு, கோவிலில் இருந்து அம்பாள் புறப்பட்டு, பட்டாதோப்பில் புதிதாக கட்டப்பட்ட மணிமண்டபத்தில் எழுந்தருளுகிறார். பிற்பகல் 2:00 மணி அளவில், சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 4:00 மணி அளவில், தவில் மற்றும் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி; அதை தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சி; இரவு 8:00 மணி அளவில், முச்சந்தியம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற உள்ளது. இரவு 9:00 மணி அளவில், வேகவதி ஆற்றில் பார்வேட்டை உற்சவத்தில், முயல் விடுதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, வான வேடிக்கையும்; இரவு 10:00 மணி அளவில், சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பார்வேட்டை விழா ஏற்பாடுகளை, ஊராட்சி தலைவர் திலகவதி இளையராஜா மற்றும் கிராமத்தினர் செய்து உள்ளனர்.