மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண திருவிழா!
ADDED :3874 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தேவம்பாடி காளிபாளையம் கோட்டை மகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண திருவிழா நடந்தது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் காலை, 5:00 மணி முதல், 6:00 மணி வரை திருக்கல்யாண உற்சவமும், 6:00 மணிக்கு மேல் மாவிளக்கு பூஜையும் நடந்தன. மதியம், 2:00 மணிக்கு நேர்த்திக்கடன் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.