திருத்தணி முருகன் கோவிலில் மாசி மக சிறப்பு வழிபாடு!
ADDED :3873 days ago
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று, மாசி மகம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, இந்து அறநிலைய துறை ஆணையரின் உத்தரவின் படி, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் ஒரு யாகசாலை அமைத்து, காலை 7:40 மணி முதல், காலை 8:55 மணி வரை, சத்ரு சம்ஹார சண்முக திரிசதி பூஜை நடந்தது. இதில், உற்சவர் சண்முகருக்கு ஆறு வகையான பிரசாதங்கள், ஆறு வகையான மலர்கள், ஆறு அர்ச்சகர்களால் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கும், ஆபத்சகாய விநாயகர், உற்சவர், வள்ளி, தெய்வானை, துர்க்கை மற்றும் பைரவர் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன.