காளியம்மன் கோவில் திருவிழா: குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்!
ADDED :3927 days ago
இடைப்பாடி: இடைப்பாடி, தாவாந்தெரு மற்றும் வெள்ளாண்டிவலசு பகுதியில் நடந்த காளியம்மன் கோவில் விழாவில், ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.இடைப்பாடி, தாவாந்தெருவில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. நேற்று காலை நடந்த குண்டம் விழாவில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். தீ மிதி விழாவில் ஆகாய விமான அலகு குத்தியும், மினி ஆட்டோ, ஆம்னிவேன் போன்ற வாகனங்களை இழுத்து வந்தும், நூலில் எலுமிச்சை அலகு குத்தி வந்தும், பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தீ மிதித்தனர்.வெள்ளாண்டிவலசு பகுதியில் நடந்த, காளியம்மன் கோவில் விழாவில், 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.