முக்தி முனீஸ்வரர்கோவில் தேரோட்டம்
ADDED :3871 days ago
க.பரமத்தி: கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் முக்தி முனீஸ்வரர் கோவில் மாசிமக தேர் திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை இழுத்தனர்.கோவிலில், பிப்ரவரி, 25ம் தேதி, விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பல்லக்கு, சிம்மவாகனம், காமதேனு வாகனம், கைலாச வாகனம், பஞ்சமூர்த்தி புறப்பாடு, யானை வாகனம் ஆகியவை நடந்தது. நேற்று தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தேர் நிலையில் புறப்பட்டு, மாரியம்மன் கோவில் வழியாக அக்ஹாரம், பழைய போலீஸ் ஸ்டேஷன் வழிழாக, பகல் ஒரு மணிக்கு தேர்நிலையை அடைந்தது.தேர் இழுத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.