உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிளாஸ்டிக் பந்தில் நீர் நிரப்பி அபிஷேகம்

பிளாஸ்டிக் பந்தில் நீர் நிரப்பி அபிஷேகம்

இறைவனுக்கு கும்ப கலசங்களில் புனதநீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், பிளாஸ்டிக் பந்தில் தண்ணீர் நிரப்பி இறைவன் மீது பீய்ச்சியடிக்கும் கோயில் எது தெரியுமா? ஆந்திராவில் திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தியில் தான். காளஹஸ்தீஸ்வரரை வேடனான கண்ணப்பர் வாயில் நீர் கொண்டு வந்து உமிழ்ந்து அபிஷேகம் செய்தார். அன்பின் காரணமாகவும், படிப்பின்மை காரணமாகவும் அவர் அவ்வாறு அபிஷேகம் செய்தார். இதை நினைவுபடுத்தும் வகையில் ஒரு பிளாஸ்டிக் பந்தில் புனிதநீர் நிரப்பி வந்து, அதை அழுத்தி லிங்கத்தின் மீது பீய்ச்சியடிக்கும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. இந்த இறைவனுக்கு காட்டில் பூக்கும் பூக்களையே அர்ச்சனைக்கு பயன்படுத்துகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !