புரட்டாசி கடைசி சோமவாரம்; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :358 days ago
கோவை; கோவை ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் புரட்டாசி கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு சிவபெருமான் காட்சியளித்தார் . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.