மயிலம் முருகன் கோவிலில் திருவோண நட்சத்திர வழிபாடு
ADDED :14 hours ago
மயிலம்: மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நடராஜர் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு திருவோண பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.
சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் நடராஜர் சுவாமிக்கு அபிஷேகம் வழிபாடுகள் நடந்தது. 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள நடராஜர் விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தனம் பன்னீர் உள்ளிட்ட நறுமண பொருட்களினால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு மூலவர் தங்கக் கவச அங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணியர் சுவாமி கிரிவலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.