உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுஷ்கோடியில் ஸ்ரீ சக்கரம் பூஜை: வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்பு!

தனுஷ்கோடியில் ஸ்ரீ சக்கரம் பூஜை: வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்பு!

ராமேஸ்வரம்:உலக நன்மை வேண்டி, தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில், நடந்த ‘ஸ்ரீ சக்கரம்’ பூஜையில், வெளிநாடு பக்தர்கள் யாகம் வளர்த்து தரிசனம் செய்தனர். உலகில் அமைதி, சமாதானம், ஆன்மிகம் வளர, ஆன்மிக சக்திக்குழு ஏற்பாட்டில், முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில், மார்ச் 5 முதல் ‘ ஸ்ரீ சக்கரம்’ பூஜை, யாக வேள்வி மாலை 5 முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், பின்லாந்து, பிரேசில் நாடுகளைச் சேர்ந்த 84 பக்தர்கள், தனுஷ்கோடி கடலில் நீராடி விட்டு, பூஜையில் பங்கேற்று வருகின்றனர். இதன் ஒருங்கிணைப்பாளரான புனேயை சேர்ந்த ஆனந்த் ஜோஸி கூறியதாவது: சிவன், பிரம்மா, விஷ்ணுவை தரிசனம் செய்ய, ‘ஸ்ரீ சக்கரம்’ பூஜை மற்றும் யாக வேள்வி நடத்துகிறோம். இதற்கு உலகில் சிறந்த இடமாக தனுஷ்கோடி கடற்கரையை தேர்வு செய்தோம். இப்பூஜையால் உலகில் அமைதி, சமாதானம் ஏற்பட கடவுள் அருள் புரிவார். இப்பூஜை மார்ச் 9 வரை நடக்கும்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !