உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்துறைப்பூண்டி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு!

திருத்துறைப்பூண்டி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு!

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் ஸ்ரீராம் உலக ரட்சகர் சீரடி சாய்பாபா சக்தி பீடம் ஆசிரமத்தில் நேற்று முன் தினம் இரவு மாசி பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் சுற்றுப்பகுதி பக்கதர்கள் பங்கேற்று தியானம் மற்றும் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பல்வேறு பூஜைகளுக்குப் பின் தல விருட்சம் மற்றும் துவர மயி அமைத்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஸ்ரீராம் உலக ரட்சகர் சீரடி சாய்பாபா சக்தி பீடம் ஆசிரமத்தில்  ரூ. இரண்டு கோடி செலவில் புதிய கோவில் கட்ட  கடந்த மாதம் பல்வேறு பூஜைகளுக்குப் பின் பூமி பூஜை நடந்தது. ஜெய்ப்பூரில் மார்பிள் கல்லில் 5 அடி 9 அங்குலம் உயரத்தில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சாய்பாபா சிலையை சீரடிக்கு எடுத்துச் சென்று பூஜித்து ஆசிரமத்தில் பிரதிஷ்ட்டை செய்துள்ளனர். நேற்று முன் தினம் காலையில் இருந்து இரவு 8.30 மணி வரை மாசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் ஆரத்தி நடந்தது. முன்னதாக பல்வேறு பூஜை களுக்குப் பின் தல விருட்சம் நட்டு, துவாரமயி அமைத்தனர். காலையில் துயில் எழுப்பலில் துவங்கி இரவு வரை ஐந்து முறை நடந்த சிறப்பு ஆரத்தியில் சாய் பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார்., இதில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரகணக் கானவர்கள் பங்கேற்று சுவாமி தரினம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழு தலைவர் கருணாநிதி, ஆடிட்டர் ராகவன்,பொறியாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !