பூட்டி இருந்த பெருமாள் கோயில் திறப்பு!
ADDED :3947 days ago
மேலுார்: மேலுார் அருகே பனங்காடி பெருமாள் கோயில் பூட்டி இருந்ததால் பொதுமக்கள் ராமநவமி, அனுமன் ஜெயந்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை கொண்டாட முடியவில்லை. இதுகுறித்து அறநிலைய துறை உதவி கமிஷனர் அனிதாவிடம் மக்கள் புகார் கொடுத்தனர். நேற்று கோயில் திறக்கப்பட்டது. அர்ச்சகராக சுந்தர்ராஜன் நியமிக்கப்பட்டார்.