உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூரில் சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம்!

திருவாரூரில் சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம்!

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_40686_104628898.jpgதிருவாரூரில் சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம்!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_40686_104632875.jpgதிருவாரூரில் சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம்!திருவாரூர்: திருவாரூரில் நடந்த ஸ்கந்த சாய்பாபா கோவில் கும்பாபிஷேகத்தில், பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர், வாசன் நகரில் உள்ள சாய்புரத்தில், பக்தர்களின் நன்கொடையுடன் புதிதாக கட்டப்பட்ட ஸ்கந்த சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. மகா கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த, 5ம் தேதி முதல், திருவாரூர் மாத்துகணேச சிவாச்சாரியார் தலைமையில், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை, 9 மணிக்கு கடம் புறப்பாடு, 9.30 மணிக்கு தியானபீட விமான கும்பாபிஷேகமும், காலை, 9.50 மணிக்கு ஸ்கந்த சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகமும் நடைப்பெற்றது. திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., ராமசுப்பிரமணி, திருவாரூர் எஸ்.பி., ஜெயச்சந்திரன், திருநெல்வேலி வீரமணி சுவாமிகள், சபரிமலை சேவா சமாஜம் மூர்த்தி சுவாமிகள், சென்னை சாய்கிரிஜா, வைத்தியநாத சுவாமிகள், ஆன்மீக ஆனந்தம் அமைப்பு தலைவர் கனகராஜ், திருவாரூர் கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கித் தலைவர் மூர்த்தி உட்பட தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் இருந்து, பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, ஸ்கந்தசாய் அறக்கட்டளை தலைவர் ஆனந்தன், செயலாளர் கனகசபாபதி, பொருளாளர் செல்வகுமார், துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், ரவிக்குமார் மற்றும் பொறுப்பாளர்கள், பக்தர்கள் செய்தனர். மேலும், கும்பாபிஷேகத்தையொட்டி இன்று, முதல் தினந்தோறும் மண்டல பூஜைகள் வரும், 48 நாட்களுக்கு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !