காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் நடந்த தெப்ப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினசம் செய்தனர். காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலின் பிரமோற்ச விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரமோற்சவ காலங்களில் தினந்தோறும் காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம் ஆராதனையுடன் சிறப்பு அலங்காரத்தில் பெரு மாள் வீதி உலா நடந்தது பிரேமோற்சவத்தின் இறுதி நிகழ்ச்சியாக தெப்ப திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் காலை விசேஷ திருமஞ்சனம், தெப்ப புண்யாஹ வாசனம் நடந்தது. இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படும் தெப்ப குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரினசம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் நித்யகல்யாணப் பெருமாள் பத்தஜன சபா ஆகியோர் செய்திருந்தார்.