உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலவிழி அம்மனுக்கு 1,008 பால்குட ஊர்வலம்!

கோலவிழி அம்மனுக்கு 1,008 பால்குட ஊர்வலம்!

மயிலாப்பூர்: மாசி மாத மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு, கோலவிழி அம்மனுக்கு, நேற்று, 1,008 பால் குடங்கள் அபிஷேகம்  நடைபெற்றது.

மாசி மாத மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு, நேற்று கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, 1,008 பால் குடங்களை பெண்கள்  தலையில் சுமந்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, கோலவிழி அம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு,  பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கோலவிழி அம்மன், சிம்ம வாகனத்தில் இரவில் திருவீதி உலா வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !