தர்மபுரி விநாயகர் கோவலில் மண்டல அபிஷேக நிறைவு விழா
ADDED :3981 days ago
தர்மபுரி: தர்மபுரி சாலை விநாயகர் கோவலில், மண்டல அபிஷேக நிறைவு விழா, வரும், 11ம் தேதி நடக்கிறது. தர்மபுரி எஸ்.வி., ரோட்டில் அமைந்துள்ள பிரசித்த பெற்ற சாலை விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, ஜனவரி, 26ம் தேதி நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா, வரும், 11ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பகல், 12 மணிக்கு பக்தர்களுக்கு மாதாவாச்சாரி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.