உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீர்மலையில் தேரோட்டம் நடக்குமா?

திருநீர்மலையில் தேரோட்டம் நடக்குமா?

திருநீர்மலை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், சக்கரங்கள் பழுதானதால், தேரோட்டம் நடைபெறுமா என, சந்தேகம் எழுந்து உள்ளது.  பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான அந்த கோவிலில், ஆண்டுதோறும்  பங்குனியில்  நீர்வண்ணர் உற்சவம், சித்திரையில் ரங்கநாதர் உற்சவம் ஆகிய விழாக்களுக்கு, கோவில் தேரோட்டம் நடைபெறும். ரங்கநாத பெரு மாள் கோவில் தேரின் நான்கு சக்கரங்களும் பழுதடைந்து உள்ளன; தேரில் உள்ள சிற்பங்களும்   சேதமடைந்து உள்ளன. தேரோட்டத்திற்கு சில  நாட்களே உள்ள நிலையில், பழுதாகி உள்ள தேர் சக்கரங்கள் சீரமைக்கப்படவில்லை. இதனால், தேரோட்டம் நடைபெறுமா என, சந்தேகம் எழுந் துள்ளது.  கோவில் செயல் அலுவலர் குமரேசன் கூறியதாவது:  தேரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. தேருக்கு ‘பிரேக்’ அமைப்புடன் கூடி ய,  இரும்பாலான நான்கு புதிய சக்கரங்கள் செய்வதற்கு, ‘பெல்’ நிறுவனத்திடம் கேட்டு உள்ளோம். வரும், 15ம் தேதி, சக்கரங்கள் வந்து விடும் என,  எதிர்பார்க்கிறோம்.  இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !